TrueCaller

ஸ்வீடன் நாட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘Truecaller’ ஆப், பயனாளர்களை கவரும் விதமாக புதுப்புது அப்டேட்டுக்களை வழங்கி வருகிறது. உங்களுக்கு வரும் அழைப்பு யாருடையது, எங்கிருந்து பேசுகிறார்கள் என்பது பற்றிய தகவல்களை வழங்குவதால், மக்கள் மத்தியில் Truecaller மிகவும் பிரபலமடைந்துள்ளது.

Truecaller ஆப்பில் வாயஸ் கால் செய்யும் வசதி சோதனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இது நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெறும் அழைப்புக்கான தகவல்களை மட்டும் இருந்தால், வர்த்தக ரீதியாக வெற்றி பெறுவது என்பது சற்று கடினம். இதை உணர்ந்த அந்நிறுவனம், தற்போது மற்ற ஆப்களுக்குப் போட்டியாக பல்வேறு வசதிகளை Truecaller ஆப்பில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

தற்போது Truecaller பீட்டா வெர்ஷனில் (10.31.6) வாய்ஸ் கால் டெஸ்டிங் நடைபெற்று வருகிறது. இது வெற்றியடைந்த பிறகு, வாய்ஸ் கால் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து வாட்ஸ்அப்பை போல், Truecaller மூலமாகவும் வாய்ஸ் கால் செய்யலாம். ஆனால், அதற்கு எதிர்முனையில் இருப்பவரும் Truecaller ஆப் வைத்திருக்க வேண்டும்.

TrueCaller –ல் இனி வாய்ஸ் கால் செய்யலாம்!

No comments